இடி- மின்னலுடன் திடீர் மழை

திங்கள்சந்தை பகுதியில் இடி- மின்னலுடன் திடீர் மழை
இடி- மின்னலுடன் திடீர் மழை
Published on

திங்கள்சந்தை, 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அத்துடன் வெயிலுக்கு இடையே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையார பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. மழை பெய்யும் பகுதிகளில் கோடை வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது. இந்தநிலையில் திங்கள்சந்தை பகுதியில் நேற்று பகல் முழுவதும் கடுமையாக வெயில் அடித்தது. இரவு 8 மணிக்கு திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடத்தொடங்கியது. அத்துடன் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடுகளுக்கு திரும்பிய தொழிலாளர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

திடீரென பெய்த மழையால் அந்த பகுதியில் கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com