திடீரென தீப்பற்றி எரிந்த கார்

கார்திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென தீப்பற்றி எரிந்த கார்
Published on

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சேக் என்பவருக்கு சொந்தமான கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயை அணைக்க முயற்சி செய்தனர். அவர்களால் தீயை அணைக்க முடியாததால் உடனே அவர்கள் இதுகுறித்து நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com