திடீரென அறுந்த மின் கம்பி.. சிறுமி மீது பட்ட பயங்கரம் - துடிதுடித்து விழுந்த குழந்தை

மின்கம்பி திடீரென அறுந்து விழுந்த‌தில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது.
திடீரென அறுந்த மின் கம்பி.. சிறுமி மீது பட்ட பயங்கரம் - துடிதுடித்து விழுந்த குழந்தை
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில், 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். குத்தாலம் அருகே கப்பூர் கிராமத்தில், இன்று காலை மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது.

தொடர்ந்து, சிறுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கிராம மக்கள் அனுமதித்து உள்ளனர். பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றுமாறு பலமுறை புகார் அளித்தும், மின்துறை அதிகாரிகளின் அலட்சத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com