

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
திருப்பூர் வளம் பாலம் அருகே, பூலவாரி சுகுமார் நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய இருந்தது. இந்த இடம் தற்போது முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பால் திடீரென கபஸ்தானாக(சுடுகாடு) மாறியுள்ளது.
இந்த சுடுகாடு மூலம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா? என சந்தேகம் வருகிறது. எனவே இந்த சுடுகாட்டை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.