தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44 சதவீதம் குறைவு; கிலோ ரூ.58-க்கு விற்பனை

தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44 சதவீதம் குறைந்து கிலோ ரூ.58-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44 சதவீதம் குறைவு; கிலோ ரூ.58-க்கு விற்பனை
Published on

ரூ.72-க்கு விற்பனையானது

உத்தரபிரதேசம். மராட்டிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பெருமளவிலான சர்க்கரை வரும் நிலையில், அங்கு முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டதால் தமிழ்நாட் டில் வரலாறு காணாத அளவுக்கு சர்க்கரை விலையேற்றம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.72-க்கு விற்பனையானது. அதன்படி, 50 கிலோ கொண்ட ஒரு மூடை சர்க்கரை ரூ.3 ஆயிரத்து 600 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் அதிரடி சோத னைகள் மேற்கொண்டு சர்க்கரை பதுக்கலை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

2 முறை ஒதுக்கீடு

இதுதவிர சர்க்கரை விலை ஏறுவதற்கு ஆலைகளில் இருந்து சந்தைக்கு அவை எடுத்துச் செல்லப்படுவதில் காலதாமதம் ஆவதே காரணம் என தெரிகிறது.இதனை கவனித்த மத்திய அரசு இனிமேல் அதாவது, வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து 2 வாரத்துக்கு ஒருமுறை சர்க்கரை ஒதுக்கீட்டு நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்து உள்ளது. இந்த முறையின் கீழ் ஆலைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவில் குறைந்தபட்சம் 40 சதவீதத்தை முதல் வாரத்திலும், மீதமுள்ள அளவை அடுத்த வாரத்திலும் அனுப்பிவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

19.44 சதவீதம் குறைவு

இது போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு சீராகி அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 25-ந் தேதி 9.7 சதவீதம் விலை குறைந்து கிலோ ரூ.65-க்கு விற்ப னையாகி வந்த சர்க்கரை விலை நேற்று மேலும் குறைந்து கிலோ ரூ.58-க்கு விற்பனையானது. அதன்படி 50 கிலோ எடை கொண்ட ஒரு மூடை சர்க்கரை நேற்று ரூ.2 ஆயிரத்து 900-க்கு விற்பனையானது.இது, கடந்த 24-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து 19.44 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை ரூ.45-க்கு தான் விற்பனை செய்யப்பட்டது என்பதும் கூடுதல் தகவல். எனவே, சர்க்கரை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com