ஆலம்பூண்டியில்கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆலம்பூண்டியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
ஆலம்பூண்டியில்கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

செஞ்சி, 

செஞ்சியை அடுத்த செம்மேட்டில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலம்பூண்டியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க வட்டாரத் தலைவர் மாதவன், மாவட்ட தலைவர்ஆர்.கே. முருகன் நிர்வாகிகள் சந்திரசேகர், ஆல்பர்ட் வேளாங்கண்ணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டமானது, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த வந்த கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தாக்கியதை கண்டித்து நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com