விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கெலமங்கலம் அருகே குடும்ப தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே குடும்ப தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்காலை செய்து கொண்டார்.

விவசாயி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 38). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே காளியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை மனைவி கண்டித்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கெலமங்கலம் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com