அரூர் அருகேசலூன் கடைக்காரர் தற்கொலை

அரூர் அருகேசலூன் கடைக்காரர் தற்கொலை
Published on

அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கும், இவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்த சசிகுமார் வீட்டில் வாந்தி எடுத்து மயங்கினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் விஷம் குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com