வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஓசூர்:

ஓசூர் ஜூஜூவாடி காந்தி நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவருடைய மகன் ஹரீஷ் (வயது 30). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் பெற்றோருடன் தகராறு செய்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி ஹரீஷ் வழக்கம்போல் மது போதையில் தனது பெற்றோருடன் தகராறு செய்தார். இதனால் பெற்றோர் தங்களின் மகள் வீட்டுக்கு சென்று விட்டனர். பெற்றோர் தன்னை பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த ஹரீஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com