பாப்பாரப்பட்டி அருகேதந்தையின் சமாதியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகேதந்தையின் சமாதியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 30). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் யுவராஜ் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் நோய் குணமடையாததால் விரக்தியில் இருந்த அவர் தனது தந்தையின் சமாதிக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே யுவராஜ் விஷத்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் தந்தையின் சமாதியில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com