பொம்மிடி அருகேபெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

பொம்மிடி அருகேபெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 36). பெயிண்டர். இவருடைய மனைவி பவுலின் எழிலரசி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிரபு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே நேற்று அவர் வீடு திரும்பினார். பவுலின் எழிலரசி வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியபோது பிரபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com