பாப்பாரப்பட்டி அருகேகட்டிட மேஸ்திரி தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகேகட்டிட மேஸ்திரி தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கீழ் ஆச்சாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதில் கடன் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடன் தொல்லையால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த தேவேந்திரன் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com