பொம்மிடி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

பொம்மிடி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள பத்திரெட்டி அள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (38). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரியும் தனது மகன் பரமேஸ்வரனுக்கு கல்பனா போன் மூலம் குடும்ப தகராறு குறித்து கூறி உடனே புறப்பட்டு வருமாறு கூறினார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த பரமேஸ்வரன் தனது தாய் விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்பனா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com