பொம்மிடி அருகேகட்டிட மேஸ்திரி உடலை பிளேடால் கீறி தற்கொலை

பொம்மிடி அருகேகட்டிட மேஸ்திரி உடலை பிளேடால் கீறி தற்கொலை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பத்மா. கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் செய்யும் போது தீர்த்தகிரிக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று பிளேடால் கழுத்து, கை மற்றும் உடலின் பல பகுதிகளில் கிழித்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு பரிசோதித்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com