தர்மபுரி அருகேஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை

தர்மபுரி அருகேஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

தர்மபுரி அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.டி. ஊழியர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 32). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்த வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மலர்வண்ணன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதியமான் கோட்டை போலீசார் மலர்வண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com