நாமகிரிப்பேட்டை அருகேசென்ட்ரிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகேசென்ட்ரிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சாகுல் அமீர் (வயது 41). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு ஆஷிமிதா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சமீபகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக சாகுல் அமீர் மனமுடைந்து காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் நாமகிரிப்பேட்டை அருகே காக்காவேரி பகுதியில் சென்ட்ரிங் வேலைக்கு சென்றார். அப்போது வேலை செய்த கட்டிடத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை பேலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சாகுல் அமீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com