கொல்லிமலையில்சமையல்காரர் விஷம் குடித்து தற்கொலை

கொல்லிமலையில்சமையல்காரர் விஷம் குடித்து தற்கொலை
Published on

சேந்தமங்கலம்:

கொல்லிமலை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 42). சமையல்காரர். இவருடைய மனைவி சுதா சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் இறந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com