இண்டூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

இண்டூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜா கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சக்தி (வயது 33). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சக்தி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந் வந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இதன் காரணமாக வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சக்தி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இண்டூர் போலீசார் சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com