பாப்பாரப்பட்டி அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரிய கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 24). இவர் பெங்களூருவில் உள்ள உறவினரின் பழைய பேப்பர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதமாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை வேலைக்கு போகுமாறு கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த விக்னேஷ் கடந்த 26-ந் தேதி விஷத்தை தின்று விட்டு அப்பகுதியில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்னேஷ் நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com