வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளை நண்பருக்கு கொடுத்தார். இதை அறிந்த நவீன்குமாரின் தந்தை கண்டித்தார். இதில் மனமுடைந்த நவீன்குமார் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைககாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com