இண்டூர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

இண்டூர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 48). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பச்சையப்பன் தனது பூந்தோட்டத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பன் இறந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com