ஓசூர், சூளகிரி பகுதிகளில்வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர், சூளகிரி பகுதிகளில்வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
Published on

ஓசூர்:

ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இளம்பெண்

ஓசூர் பாகலூர் சாலை ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி இந்துமதி (வயது 27). ரஞ்சித் கடன் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள வீட்டை விற்பனை செய்தார். இதனால் மனமடைந்த இந்துமதி, கடந்த 14-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூலித்தொழிலாளி

சூளகிரி தாலுகா கும்பளம் அருகே உள்ள ராமன்தொட்டியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா (22). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ராமன்தொட்டி வனப்பகுதி அருகே ஆஞ்சப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறு

சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சரளா (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சரளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com