நாமக்கல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் வரதராசு. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 41). நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த கஸ்தூரி தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி இறந்தார்.

இதுதொடர்பாக வரதராசு நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மகளின் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கஸ்தூரி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com