தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மேல் சிறுவளூர் மெயின் ரோட்டை சர்ந்தவர் பத்திநாதன். இவரது மகன் குழந்தை ஏசு(வயது26). கடந்த 5-ந்தேதி இவர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது அங்கு உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இன்று  காலை நீண்டநேரம் ஆகியும் குழந்தை ஏசு அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் விடுதி பணியாளர்கள் உடனடியாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com