விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

கபிஸ்தலம் அருகே திருமணமான 3 மாதங்களில் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

கபிஸ்தலம் அருகே திருமணமான 3 மாதங்களில் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விஷம் குடித்த பெண்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி சந்து தெருவில் வசிப்பவர் அஜித் குமார். இவருடைய மனைவி குருலட்சுமி (வயது22). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குரு லட்சுமிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் மனமுடைந்த குரு லட்சுமி கடந்த 14-ந் தேதி வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சிமருந்தை (விஷம்) குடித்துவிட்டார்.

இதனால் மயங்கி கிடந்த அவரை உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

அங்கு குருலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இருந்தார். இது குறித்து அவரது தந்தை எடக்குடி புதுத்தெருவை சேர்ந்த செல்வராஜ் கபிஸ்தலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com