சேந்தமங்கலம் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தேவேந்திர தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (15), தினேஷ்குமார் (12) என்ற 2 மகன்களும், காமாட்சி (12) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சரண்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் அன்றில் இருந்து சுரேஷ் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவரது தாயார் மும்பையிலும், தந்தை துத்திகுளத்திலும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அதை நினைத்தும் சுரேஷ் வருந்தியதாக கூறப்படுகிறது.

விசாரணை

இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள முற்றத்தில் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

======

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com