நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
Published on

அரூர்:

அரூர் அருகே உள்ள செல்லம்பட்டி புதூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் ஆகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com