குருபரப்பள்ளி அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குருபரப்பள்ளி அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அடுத்த சிந்துகும்மனப்பள்ளியை சேர்ந்தவர் யசோதா (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 55). 2 பேரும் உறவினர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் யசோதா வீட்டில் இருந்த விறகுகளை முனிரத்தினம் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனிரத்தினம் யசோதாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த யசோதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com