டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கார் டிரைவர். இவர் ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த இந்துமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் சென்னைக்கு தேர்வு எழுதி விட்டு வருவதாக சென்ற இந்துமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் தடுத்து நிறுத்தினார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் மீண்டும் தூக்குப்போட்டு கொண்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com