பள்ளிபாளையம் அருகேவிசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம் அருகேவிசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசைத்தறி தொழிலாளி

பள்ளிபாளையம் அடுத்த களியனூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் சந்தானம் (வயது 35). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு காயத்திரி (30) என்ற மனைவியும், 2 மகன்களும், மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்தானம் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதையடுத்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார், மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சண்முகப்பிரியா மற்றும் போலீசார் சந்தானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com