நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள என்.எஸ்.ரெட்டியூரை சேர்ந்தவர் மாது (வயது 58). விவசாயி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாது, கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாது உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com