தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published on

புதுச்சத்திரம் அருகே உள்ள பெரும்பாளிப்பட்டியை சேர்ந்த லட்சுமி காந்தன் மகன் லோகேஸ்வரன் (வயது 33). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோகுல பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் லோகேஸ்வரனுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு வலது கை தோள்பட்டையில் அடிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகும் அவருக்கு அடிக்கடி தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் லோகேஸ்வரனுக்கு வழி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி லோகேஸ்வரன் இறந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com