சேந்தமங்கலத்தில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலத்தில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள கொல்லர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருடைய மகன் சபரிநாதன் (வயது 25). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சபரிநாதன் நேற்று அதிகாலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார் சபரிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com