பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்:

பாரூர் கார்வே நகரை சேர்ந்தவர் தர்மன். இவருடைய மனைவி தீபநாயகி (வயது 29). இந்த நிலையில் தர்மனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த தீபநாயகி கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com