வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தேவர் உளிமங்கலம் பக்கமுள்ள பல்லப்பள்ளியை சேர்ந்தவர் நஞ்சப்பா. இவருடைய மகன் கருமாரி (வயது 19). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி கருமாரி தந்தையிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டார். அப்போது அவர் பணம் தர மறுத்தார். இதில் மனமுடைந்த கருமாரி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com