தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோட்டில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை
Published on

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு சீதாராம் பாளையம் நகராட்சி வணிக வளாகத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரபு திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தொழிலாளி உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த விதேஷி சிதார் (வயது 45) என்பதும், இவர் திருச்செங்கோட்டி வேலை கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வேலை பார்த்த இடம், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விதேஷி சிதார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com