வேலகவுண்டம்பட்டி அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் லோகு (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லோகு பரமத்திவேலூர் பேட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் லோகு தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லோகு தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் கணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகு இறந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com