ஓசூர் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை

ஓசூர் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை
Published on

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 54). விவசாயி இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 7-ந் தேதி முனிராஜ் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டதால் மனவேதனையில் விஷம் குடித்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனிராஜ் இறந்தார் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com