கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை

கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கோவிந்தசாமி (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கோவிந்தசாமி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தடியில் விஷத்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com