கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை
Published on

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள திப்பனூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 47). கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. அவரது மனைவி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த விஜயன், கடந்த 20-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com