ஓட்டல் தொழிலாளி தற்கொலை

ஓட்டல் தொழிலாளி தற்கொலை
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் அன்பு (வயது 58). இவர் பாலக்கோட்டில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 30-ந் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் எலி பேஸ்ட் தின்று மயக்கமடைந்தார். இதையறிந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com