சூளகிரி அருகேவெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

சூளகிரி அருகேவெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
Published on

சூளகிரி

சூளகிரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரத்தைச் சேர்ந்தவர் முரளி (வயது 25). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த அவர், கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூருவை சேர்ந்தவர்

பெங்களூரு ஹோங்கசந்திரா பகுதியை சேர்ந்தவர் மாருதி (32). கூலித் தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த 28-ந் தேதி சூளகிரி அருகே நல்லராலப்பள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு மனஉளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் மாலை மாருதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com