பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தோளனூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு சுகதிலி என்ற மனைவியும் கிரன், சந்தோஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலைவயில் கனகராஜிக்கும், அவருடைய உறவினர் ராஜா, அவரது மகன்கள் பிரபு, கோகுல் ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இதற்கிடையே கனகராஜ் வீட்டின் வெளியே நின்றிருந்தார். அப்போது உறவினர்கள் வேல்முருகன் மனைவி கண்மணி, பிரபு மனைவி வெண்ணிலா, வேலுமணி மனைவி சின்னமணி ஆகியோருக்கும் கனகராஜிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கனகராஜ் வீட்டின் அருகே உட்கார்ந்து இருந்தபோது பிரபு வந்து தனது மனைவியை ஏன் திட்டினாய் என கேட்டு அடித்துள்ளார்.

விசாரணை

இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சுகதிலி ஏ.பள்ளிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com