பனமரத்துப்பட்டி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி

பனமரத்துப்பட்டி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
Published on

பனமரத்துப்பட்டி 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர்.கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் 3 நாட்கள் விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த சரவணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சரவணன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com