குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

பரமத்திவேலூர்

கூலித்தொழிலாளி

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள நகப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராஜா (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ராஜா கடந்த 15-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com