யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு - கைது செய்ய வாய்ப்பு..!

போத்தனூர் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சூலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு - கைது செய்ய வாய்ப்பு..!
Published on

கோவை:

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அதை யூ டியூப்பில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார்.

இது தொடர்பாக கோவை மாநகரக் காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14ம் தேதி டிடிப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் ஐபிசி 279 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com