

சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூலூர்பேட்டை-நெல்லூர் இடையேயான பயணிகள் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.05 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66035), தற்போது புதிய நேர அட்டவணைப்படி சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 10.05 மணிக்கு நெல்லூர் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.