தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி
Published on

சென்னை,

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில், ,தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் கோவை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ஊட்டி, நீலகிரி சுற்றுவட்டாரங்களில் கோடை மழை பெய்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com