கோடை சீசன்: ஊட்டி-குன்னூர் சிறப்பு மலை ரெயில் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை, மலைரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சிறப்பு மலை ரெயில் இயக்கத்திற்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் முதல் ஊட்டி வரையில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

குன்னூர் முதல் ஊட்டி வரை 5 பெட்டிகளுடன் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். குன்னூர் முதல் ஊட்டி வரையில் மொத்தம் 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். குன்னூரிலிருந்து காலை 8.20 புறப்படும் ரெயில் காலை 9.40 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும், மாலை 4.45 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் ரெயில் மாலை 5.55 மணிக்கு ஊட்டி வந்தடையும்.

ஊட்டி முதல் கேத்தி வரையிலான சிறப்பு ரெயில் வாரம் நான்கு நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். 210 இருக்கைகளில் முதல் வகுப்பு 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு 130 இருக்கைகள் இருக்கும். இந்த ரெயில் ஊட்டி ரெயில் நிலையத்திலிருந்து 6 முறை கேத்திக்கு இயக்கப்படும். காலை 9.45, 11, 11.30 மணி மதியம் 1.10, 3 மணி மற்றும் மாலை 4.30க்கு கேத்திக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com