

சென்னை,
இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 15, 22, 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06045) மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து வரும் 17, 24, 31 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (10-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.